
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்ட த்தைச் சேர்ந்தவர் ஜிலானி. இவருடைய மூத்த சகோதரி மகபூபி. இந்த நிலையில் ஜிலானிக்கும் அவருடைய சகோதரி மகபூப்பிக்கும் இடையே சொத்து விவகாரத்தில் சண்டை வந்துள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றவே தன்னுடைய அக்கா என்றும் பார்க்காமல் கண்மூடித்தனமாக கோடரியால் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மகபூபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சகோதரர் ஜிலானியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.