ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தில் அப்பலநாயுடு-ஜெயம்மா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ராஜசேகர் என்ற மகன் இருக்கிறார். இவர்களுக்கு சொந்தமான ஒரு நிலத்தை ராஜசேகர் விற்பனை செய்ய வேண்டும் என்று விரும்பிய நிலையில் அதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் தந்தை மகனுக்கு இடைய அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது‌. இந்த நிலையில் நேற்று மாலை ராஜசேகர் அந்த இடத்தை டிராக்டர் மூலமாக ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அந்த சமயத்தில் அங்கு சென்ற அவரின் பெற்றோர் அதனை தடுத்து நிறுத்தினர். இதனால் ராஜசேகர் கோபம் அடைந்த நிலையில் திடீரென டிராக்டரை தன் பெற்றோரின் மீது ஏற்றினார். அவர் டிராக்டரை ஏற்றி தாய் தந்தையை கொடூரமாக கொலை செய்த பின் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.