ஐபிஎல் தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில் நேற்று ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டி ‌ ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் இந்த முறையாவது மும்பை அணி ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெறுமா என்று எதிர்பார்ப்பு நிலவியது.‌ இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் அதிகபட்சமாக மும்பை அணியின் திலக் வர்மா 65 ரன்களும், வதேரா 49 ரன்களும் எடுத்திருந்த நிலையில், ராஜஸ்தான் அணியில் சந்தீப் வர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

அடுத்ததாக களம் இறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 74 ரன்களை குவித்தனர். இதில் பட்லர் 35 ரன்களில் அவுட் ஆன நிலையில் அடுத்ததாக கேப்டன் சாம்சன் ஜெய் ஸ்வால் களம் இறங்கினார். இதில் ஜெயஸ்வால் 104 ரன்கள் எடுத்து சதம் அடித்த நிலையில், சாம்சன் 38 ரன்கள் எடுத்து இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த போட்டியில் ராஜஸ்தான் 18.5 ஓவரில் 183 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி பெற்றது. இந்த தோல்வியினால் ஜெய்ப்பூரில் 13-வது தோல்வியை மும்பை அணி சந்தித்துள்ளது. மேலும் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.