
திருப்பூர் மாவட்டம் அவிநாசி முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் இடையபாளையத்தில் 2.25 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அந்த இடத்துக்கான சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் கார்த்திகேயன் விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் பிரபு, அவரது உதவியாளர் கவிதா ஆகியோர் 7000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். இதுகுறித்து கார்த்திகேயன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி கார்த்திகேயன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிரபு மற்றும் கவிதாவிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரபுவையும், கவிதாவையும் கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.