
சென்னை மாவட்டத்தில் உள்ள யானை கவுனி வால்டர் சாலையில் 18 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் பாரிமுனை பகுதியில் இருக்கும் தனியார் பழக்கடையில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து இளம்பெண் வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் இளம்பெண்ணை வழிமறித்து வாக்குவாதம் செய்தனர். அதில் ஒரு வாலிபர் என்னை காதலிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.
அதன் பிறகு இளம்பெண் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரிக்கப் போவதாக இருவரும் மிரட்டினர். உடனே இளம்பெண் கூச்சலிட்டதால் அந்த பகுதி மக்கள் ஓடி வந்தனர். அதற்குள் இரண்டு வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர். பதறிய இளம்பெண் மீது அந்த பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இளம்பிள்ளை மிரட்டிய அர்ஜுன்(22) ஜேம்ஸ்(24) ஆகிய வாலிபர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.