
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியவர் தான் சொல்வதை கேட்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆசிரியரை POCSO சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.