மதுரையில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கே எடுத்துக்காட்டு தான் சென்னையில் மருத்துவமனையும் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகமும். தமிழகத்தின் தலைநகரம் சென்னை என்றால் தமிழகத்தின் கலைநகரம் மதுரை.

கண்ணகி எரித்த மதுரையில் அறிவு தீ பரவ போகிறது. சங்கம் வளர்த்த மதுரையில் நூலகம் அமைக்காமல் வேறு எங்கு அமையும். மருத்துவமனையும் நூலகமும் திமுக அறிவிக்காத தேர்தல் வாக்குறுதிகள் எனவும் கலைஞர் மேல் உள்ள அன்பின் வெளிப்பாடு இந்த நூலகம் எனவும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.