தமிழக அரசு விசைத்தறியாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்த 750 யூனிட் மின்சாரத்தை ஆயிரம் யூனிட் வழங்குவதாக அறிவித்தது. இந்நிலையில் விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பாக கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், நெசவாளர்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் படித்து பார்த்தேன். அனைத்து கோரிக்கைகளையும் படிப்படியாக அதே நேரம் உறுதியாக நிறைவேற்றப்படும். நீங்கள் வைக்காத கோரிக்கைகளையும் நான் நிறைவேற்ற போகிறேன். ஜவுளி துறைக்கு ஆணிவேராக விளங்கக்கூடியது நெசவுதான். ஜவுளி துறையில் இந்தியாவின் முன்னிலை மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.