காசியாபாத் நகரத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு  சம்பவம் சமுதாயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு உதவியாளராக பணியாற்றிய ரீனா என்ற பெண், வேலை செய்யும் வீட்டில் பாத்திரங்களில் சிறுநீர் கழித்தும், அதனை உணவுப் பொருட்களுடன் கலந்து ரொட்டி தயாரித்தும் இருப்பதை வீடியோ ஆதாரங்களால் நிரூபிக்கப்பட்டது. இந்த அருவருப்பான செயல் சமூக ஊடகங்களில் வைரலாகி, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வீட்டு உரிமையாளர்கள், சமையலறையில் ரகசிய கேமரா பொருத்தி பணியாளரின் செயல்களை கண்காணித்த போது, ரீனாவின் கொடூர செயல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இச்சம்பவத்திற்கு முன் அந்த குடும்பத்தினர் அனைவரும் எதற்கும் விளக்கம் இல்லாமல் தொடர்ந்து உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். ரீனா மீது சந்தேகம் எழுந்ததால், அவரின் செயல்களை  ரகசியமாக  கண்காணித்தனர்.

அவர்கள் சமையலறையில் ரகசிய கேமரா பொருத்தி கண்காணித்த போது தான் பாத்தரங்களில் சிறுநீர் கழித்ததுடன் ரொட்டியில் சிறுநீர் கழித்தும் சாப்பாடு செய்துள்ளார். இதனை சாப்பிட்டதால் தான் குடும்பத்தில் உள்ள அனைவர்களுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் கண்டனங்களை குவித்து வருகின்றனர். இதற்கு முன்னதாக கூட ரொட்டியில் எச்சில் துப்பி தயாரிக்கும் சில வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் தற்போது ஒரு பெண் மிகவும் மோசமாக சிறுநீர் கழித்து நம்பிக்கை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்களின் சாப்பாட்டில் கலந்துள்ளார். இதனைப் பார்த்த ஒரு பயனர் அருவருப்புக்கு அப்பாற்பட்டது. இத்தகைய நபர்களுக்கு கடுமையான தண்டனை தேவை என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர் வீட்டு உதவியாளர்களின் மீதான நம்பிக்கை உடைந்து விட்டது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.