தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் எல்.பி நகர் பகுதி உள்ளது. இங்கு மெட்ரோ ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பயணிகள் இருந்த நிலையில் ஒரு காதல் ஜோடி வந்தனர். இவர்கள் ரயில் நிலையத்திற்கு அருகே இருந்த ஒரு மேடையில் அமர்ந்தனர். பின்னர் திடீரென ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

ரயில்வே ஸ்டேஷனில் ஏராளமான பயணிகள் இருந்த நிலையில் அதைப்பற்றி யோசிக்காமல் அவர்கள் முத்தமழை பொழிந்தனர். இதனை சிலர் தங்களுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் பொது இடத்தில் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளக் கூடாது என்று கண்டனடம் தெரிவித்து வருகிறார்கள்.