சமூக வலைதளங்களில் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில், ஒரு ஆடவர் லிப்டில் நுழைந்து நிஜமாகவே சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகள் பதிவாகிய சிசிடிவி வீடியோ ஒன்று X தளத்தில் வைரலாகியுள்ளது. பொது இடங்களில் இவ்வாறு அருவருப்பான நடத்தை காட்டியதற்காக, குற்றவாளியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வீடியோவில், ஒருவன் ஒரு அடுக்குமாடியில் பொருட்கள் டெலிவரி செய்த பின், லிப்ட் உள்ளே நுழைந்து கதவு மூடப்பட்டவுடன் ஓரமாக சென்று தாராளமாக சிறுநீர் கழிப்பது காணப்படுகிறது.

 

அதன் பிறகு, அவர் தனது காலால் சிறுநீரை கதவின் இடைவெளிக்கு தள்ள முயற்சிப்பது படத்தில் தெளிவாக காணப்படுகிறது. இந்த அருவருப்பான செயல் நெட்டிசன்களிடம் கடும் கோபத்தை  ஏற்படுத்தியுள்ளது. “இது வெறும் மோசமான நடத்தை மட்டும் அல்ல, மிகவும் ஆபத்தானதும் கூட. லிப்ட்கள் பொதுமக்கள் பகிர்ந்து பயன்படுத்தும் இடங்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை  கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது வரை சம்பவ இடம் மற்றும் அந்த நபரின் அடையாளம் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.