
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்து விட்டது. அவர்கள் இணையதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் லைக்ஸ் களை வாங்க வேண்டும் என்பதற்காகவும் சில சமயங்களில் விபரீதமான செயல்களை செய்கிறார்கள். இதன் காரணமாக உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது. அதாவது உயரமான மலை மீது நின்று ரீல்ஸ் எடுப்பது மற்றும் ரயில் தண்டவாளத்தில் நின்று, ஓடும் ரயிலில் என்று பலவிதமாக ஆபத்தான முறையில் கூட ரீல்ஸ் எடுக்கிறார்கள்.
இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் பற்றிய செய்திகளும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதே சமயத்தில் சிலர் வினோதமானவும் அருவருக்கத்தக்க செயல்களிலும் ஈடுபடுவார்கள். அந்த வகையில் ஒரு பெண்மணி ரீல்ஸ் வீடியோ எடுத்து லைக்ஸ் வாங்குவதற்காக நாயின் மார்பிலிருந்து பால் குடித்துள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் அந்த பெண்ணின் செயலுக்கு கண்டனங்களை குவித்து வருகிறார்கள். ஒரு பயனர் லைக் வாங்குவதற்காக இவ்வளவு கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவீர்களா என்று விமர்சிக்க மற்றவரோ ரேபிஸ் நோய் வந்துவிடும் என்று கூறுகிறார்.
यह रहा वीडियो देखिए pic.twitter.com/TiDT6dpRYF
— ममता राजगढ़ (@rajgarh_mamta1) December 15, 2024