
புதுச்சேரியின் சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் தனக்கு வீல் சேர் கொடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை எடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்
மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் தொகுதியில் வசிக்கிறார். அந்த மாற்றுத்திறனாளி இளம்பெண் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது, ஒரு நோயால் பாதிக்கப்பட்டு நான் 12 வருஷமா இப்படியே தான் உட்கார்ந்து இருக்கேன்.
மாதம்தோறும் உதவித்தொகை வாங்குகிறேன். அரசிடமிருந்து நான் வேறு எந்த சலுகையும் பெறவில்லை. எனக்கு உதவி பண்ணுங்க. கையெல்லாம் எனக்கு ரொம்ப பலவீனமா இருக்கு. என்னால சுத்தமா நடக்க முடியல. நான் உட்கார்ந்து தான் இருக்கேன். இதனால எனக்கு எலக்ட்ரிக் வீல் சேர் கொடுங்க என இளம்பெண் வீடியோவில் பேசியுள்ளார். அந்த வீடியோவை இணைத்தில் வைரலாகி காண்போரின் நெஞ்சை உலுக்குகிறது.