
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 29 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்ததும் அமைச்சர் அமித்ஷா உடனடியாக ஸ்ரீ நகருக்கு விரைந்து சென்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பஹல்கான் பகுதியில் இன்னும் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதிவு உள்ளதாக தகவல் வெளியானதால் மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.
மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 1 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.