
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரிக்கு வந்து, அங்கு நடக்கும் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி. இதையடுத்து பிரதமர் மோடியை மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து அண்ணாமலை, எல் முருகன் உள்ளிட்டோர் உரையாற்றினர். பின்னர் ‘என் அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்’ என தமிழில் தனது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. இதில் பிரதமர் மோடி பேசியதாவது, நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை கிளம்பி இருக்கிறது. நாட்டை துண்டாட வேண்டும் என நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டதை போலவே தமிழக மக்களும் செய்வார்கள்.
1991 இல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் சென்ற நான் தற்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்துள்ளேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுகிறது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி எடுபடாது. திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம். திமுக -காங்கிரஸ் கூட்டணி முற்றிலுமாக துடைத்தெறியப்படும். தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே விருப்பம். திமுக மற்றும் காங்கிரஸின் கர்வத்தை தமிழக மக்கள் தேர்தலில் அடக்குவர். தமிழக மண்ணில் மாபெரும் மாற்றம் பெற்றுள்ளது என்னால் உணர முடிகிறது. மக்களிடம் கொள்ளை அடிக்கவே திமுக, காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.
இந்தியா கூட்டணி ஊழல் செய்வதற்கு தான் போராடுகிறது. 2ஜி ஊழல் முறைகேட்டில் பெரும் பங்கு வகித்தது திமுக தான். பாஜக ஆட்சியில் 5ஜி கொண்டு வந்தோம். ஆனால் இந்தியா கூட்டணியில் 2ஜியில் ஊழல் செய்தது. ஹெலிகாப்டர் ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் திமுக, காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றது. கேலோ இந்தியா போட்டியை வெற்றிகரமாக நடத்தினோம். காமன்வெல்த் போட்டியில் காங்கிரஸ் ஊழல் செய்தது.
பாரதிய ஜனதா கன்னியாகுமரியை நேசிக்கிறது. திமுக -காங்கிரஸ் கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது. கன்னியாகுமரி -திருவனந்தபுரம் சிறப்பு வழித்தடத்தை பாஜக அரசு செயல்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூபாய் 15,000 கோடியில் புதிய ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மீனவர்களின் நலனுக்காக பாஜக அரசு தொடர்ந்து பாடுபடுகிறது. வ.உ.சி துறைமுகம் தற்போது மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை பாஜக அரசு புதுப்பித்து வழங்கி இருக்கிறது.
ராணுவ ஹெலிகாப்டர் வாங்குவதில் ஊழல் செய்தவர்கள் இந்தியா கூட்டணியினர். இந்தியா கூட்டணியினரின் ஊழல்களை பட்டியலிட்டால் அது மிகவும் நீளமானது. தமிழகத்தில் குடும்ப ஆட்சி அகற்றிவிட்டு பாஜக ஆட்சியை தமிழகம் மக்கள் கொண்டு வருவர்”என பேசினார்.
மேலும் ஜல்லிக்கட்டுக்கு திமுக, காங்கிரஸ் தடை விதித்தது, ஜல்லிக்கட்டுக்கு மெளனம் காத்தது. பாரபம்பரியத்தை அழிக்க நினைத்தார்கள். பாஜக அரசு அதனை நீக்கியது. ஜல்லிக்கட்டு மீண்டும் முழு உற்சாகத்துடன் கொண்டாட ஏற்பாடுகளை செய்தது நம்ம பாஜக அரசு, நம்ம இந்திய கூட்டணி அரசு தான் காரணம். தமிழகத்தின் அடையாளத்தை பெருமையை பாதுகாப்பதில் பாஜக என்றும் முன்னணியில் இருக்கிறது. சனாதனத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி தமிழக மக்கள் காண தடை விதித்த கட்சி திமுக. தமிழ்நாட்டின், தமிழ் பண்பாட்டின் எதிரி திமுக என விமர்சித்தார் மோடி.
பெண்களுக்கு வலிமை சேர்க்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. அயோத்தி நிகழ்ச்சியை பார்க்க தடை விதித்ததற்கு உச்ச நீதிமன்றமே கண்டனம் தெரிவித்தது. தமிழகத்தின் அடையாளம் பெருமையை பாதுகாக்க பாஜக அரசு என்றும் முன்னணியில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தான் தமிழகத்திற்கு மீண்டும் ஜல்லிக்கட்டை கொண்டு வந்தது.
நான் அடிக்கடி தமிழகம் வருகிறேன். என்னால் தமிழ் மொழி தெளிவாக பேச முடியவில்லை. திமுக, காங்கிரஸ் செய்த தவறு மற்றும் பாவக்கணக்கிற்கு பதில் கூற வேண்டும். திமுக, காங்கிரஸ் பெண்களுக்கு விரோதியாக இருக்கின்றன பாஜக பெண்களை மதிக்கிறது. உங்களின் ஆதரவும் அன்பும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கு ஆற்றலை அளிக்கிறது. குமரியில் வரும் முழக்கம் மற்ற கட்சி தலைவர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. காங்கிரஸின் திமுகவும் தமிழகத்தின் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள். காங்கிரஸின் திமுகவும் செய்த தவறுகளுக்கான பதிலை சொல்லும் காலம் வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.
Incredible energy at the public meeting in Kanyakumari. The affection for the BJP is unparalleled.https://t.co/b0TlbCExbo
— Narendra Modi (@narendramodi) March 15, 2024