ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பக்கத்தில் உள்ள வாலிநோக்கம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் முகமது மாலிக். இவர் தன்னுடைய குடும்பத்தோடு குற்றாலம் சென்று விட்டு சாயல்குடி அருகே நரிப்பையூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு காரனது சாலையோரம் இருந்த பனைமரத்தில் மோதியது.

இதில் காரில் பயணம் செய்த 2 பேர், 8 மாத குழந்தை உட்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த முகமது மாலிக் மற்றும் அவருடைய மனைவி, மகள் அஸ்வின் ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.