கேரள மாநிலத்தில் உள்ள மாவேலிக்கேரை பகுதியிலிருந்து தஞ்சாவூருக்கு ஒரு தனியார் பேருந்தில் சிலர் சுற்றுலா சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து இன்று இடுக்கி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது புல்லு பாறை அருகே வளைவில் திரும்பிய போது திடீரென அந்த பேருந்து கட்டுப்பாட்டு இழந்து ஒரு 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.