மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. இதனையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும். புனேவில் 2 கர்ப்பிணிகள் உட்பட 7 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள து.

ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள் உடலில் இருக்கும். பாதிப்பு ஏற்பட்ட 2 அல்லது 7-வது நாளில் அறிகுறிகள் காணப்படும். இதற்கு இதுவரை எந்த தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏடிஸ் வகை கொசுக்கடியை தவிர்ப்பதன் மூலமாக இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.