மும்பை மாநிலத்தில் யோகேஷ் ஷிண்டே (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஜிம் ஒன்றுக்கு தினமும் போவதை வழக்கமாய் வைத்திருந்தார். இவருக்கு ஜிம்மில் நகேல் என்னும் பயிற்சியாளர் பயிற்சி கொடுத்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று யோகேஷ் வழக்கம் போல் ஜிம்முக்கு சென்று பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது யோகேஷ் பயிற்சி நேரத்தில் அருகில் உள்ளவர்களை சிரிக்க வைப்பதற்காக காமெடி செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த ஜிம் பயிற்சியாளரான நகேல் கோபத்தில் யோகேஷை உருட்டு கட்டையால் தலையில் தாக்கினார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் நகேலை தடுத்து, யோகேஷை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து யோகேஷ் இந்த சம்பவத்தை பற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நகேலை கைது செய்தனர். மேலும்  கண்காணிப்பு கேமராவின் காட்சியை வைத்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.