
பிரபல ஜியோ நிறுவனம் தற்போது 19 ரூபாய் மற்றும் 29 ரூபாய் ரீசார்ஜ் திட்டங்களுக்கான வேலிடிட்டியை குறைத்துள்ளது. முன்னதாக ரீசார்ஜ் திட்டங்கள் முடிவடையும் வரை 19 மற்றும் 29 ரூபாய் ரீசார்ஜ் திட்டங்களுக்கான வேலிடிட்டி இருக்கும்.
ஆனால் தற்போது 19 ரூபாய்க்கு (1 ஜிபி டேட்டா) 24 மணி நேர வேலிடிட்டியும், 29 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்திற்கு (2ஜிபி டேட்டா) 2 நாட்கள் வேலிடிட்டியும் வழங்கியுள்ளது. மேலும் இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் ஜியோ பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.