சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு  ஏற்ப சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் மாதத்தின் முதல் நாளான ஜூன் 1ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 70 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது. இதனால் இன்று முதல் சிலிண்டர் விலை 1840 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. மேலும் வீட்டு உபயோக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மாற்றம் இன்றி 818 ரூபாய் 50 காசுகளாக உள்ளது.