இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு இல்லாதவர்களே கிடையாது என்ற அளவிற்கு அனைவருடைய கையிலும் கிரெடிட் கார்டு வந்துவிட்டது. அன்றாட செலவுகளை பூர்த்தி செய்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் முக்கியமான ஒன்றாக கிரெடிட் கார்டு மாறிவிட்டது. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நமக்கு விருப்பமான பொருட்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டு முக்கிய பங்களிப்பை கொடுக்கின்றன.

இதற்கிடையில் சர்வதேச கிரெடிட் கார்டு பயனர்களுக்கான கிரெடிட் கார்டு பயன்பாட்டு விதிகள் மாறி வருகின்றன. அதன்படி, ரிசர்வ் வங்கியின் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டம் (LRS) இப்போது இந்தியாவுக்கு வெளியே கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்குப் பொருந்தும். இந்தியாவிற்கு வெளியே உள்ள கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ஜூலை 1 வரை 5% டிசிஎஸ் வரி விதிக்கப்படும். அதன் பிறகு 20% வரி விதிக்கப்படும். இதன் மூலம், கிரெடிட் கார்டு பில் பெரிய அளவில் உயரும். வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு டிசிஎஸ் விதித்துள்ளதால், கிரெடிட் கார்டு பில் உயர வாய்ப்புள்ளது.