தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,  ஜூலை 11 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள மக்களுடன் முதல்வர் மற்றும் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் பங்கேற்க  அழைப்பு விடுத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 11-ம் தேதி தர்மபுரியில் மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.