டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அய்யூப் என்ற பயணி திடீரென இதய செயலிழப்பு காரணமாக மயங்கி விழுந்தார். அப்போது அங்கு இருந்த CISF அதிகாரி ஒருவர் சற்றும் தாமதிக்காமல் அய்யூப்க்கு CPR செய்துள்ளார்.

இதனால் ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்ட அய்யூப் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.