தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் 5,000 கோடி மதிப்பிலான சொத்தை தங்கள் ஆட்சியில் காங்கிரஸ் அபகரிக்க முயன்றுள்ளனர். ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் ஊழல்களை அமலாக்கத்துறை அம்பலப்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்திற்கு 90 கோடி கடனாக கொடுப்பது போல் கொடுத்துவிட்டு பின்னர் மொத்த பங்கையும் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி வாங்கியுள்ளனர். அந்த நிறுவனத்தில் முன்னாள் தலைமை நீதிபதி, முன்னாள் சட்ட அமைச்சர் ஆகியோர் முக்கிய பங்குதாரர்களாக இருக்கும் நிலையில் பழமையான அந்த நிறுவனத்தின் சொத்துக்களையே தங்கள் ஆட்சியில் அபகரித்துள்ளனர்.

அதிகாரத்தை கருவியாக கொண்டு காங்கிரஸ் இத்தனை ஊழல்களை செய்துள்ளது என்றால் அதன் கூட்டணி கட்சியான திமுகவும் டாய்லெட் முதல் டாஸ்மாக் வரை ஊழல் செய்துள்ளது. அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு நாங்களும் திளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். மேலும் மக்கள் பணத்தை இப்படி கொள்ளை அடிப்பவர்கள் பிரதமர் மோடியின் ஊழலற்ற ஆட்சியில் எங்கும் ஓடி முடிய முடியாது. ஊழல் செய்வதில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கிறது. மிகப் பிரமாதமாக சூப்பராக இருக்கிறார்கள் என்று  என்று பதிவிட்டுள்ளார்.