
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஏராளமானோர் டிக்கெட் எடுப்பதற்காக கவுண்டரின் முன்னே கூடிருந்தனர். அப்போது டிக்கெட் வழங்கும் அதிகாரி டிக்கெட் பணத்தை Google Pay மூலம் அனுப்புமாறு கூறியுள்ளார். ஆனால் பயணிகள் பலரிடம் Google Pay இல்லாமல் இருந்துள்ளது.
இதனால் காசை வாங்கி விட்டு டிக்கெட் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு டிக்கெட் வழங்கும் அதிகாரி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் ஆவேசமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.