
அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் நிலவியது. அதன் பிறகு 4 வருடங்கள் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வமும் தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்தனர். அதன் பிறகு கட்சியில் ஏற்பட்ட பிரச்சனைகளால் ஒ பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதன் காரணமாக அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதோடு அதற்கான பணிகளை செய்து வரும் நிலையில் மாவட்டம் தோறும் கள ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த கள ஆய்வுக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் இடையே மோதல் போக்கு ஏற்படும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருச்சி சூர்யா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சேலத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்குழு கூட்டத்தின் போது கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி வீட்டில் சென்று தங்கினார்களாம். அப்போது எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகளிடம் கூட்டணி கண்டிப்பாக அமையும். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நாம் தான் ஆட்சியைப் பிடிப்போம். அதுவரை பொறுமையாக இருங்கள் என்று கூறினாராம். அப்போது சிவி சண்முகம் டிசம்பர் வரை தான் நான் பொறுமையாக இருப்பேன். தை பிறந்து விட்டால் நான் யார் என்று தெரியும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் சவால் விட்டு வந்ததாக திருச்சி சூர்யா கூறியுள்ளார்.
அதோடு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெறாவிடில் அதிமுகவில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியை தூக்கி விடுவார்கள் எனவும் அந்த இடத்திற்கு வேறு ஒருவர் வருவார் எனவும் கூறுகிறார். இதிலிருந்து எடப்பாடி பழனிசாமிக்கு தப்பிக்க ஒரே வழி பாஜகவிடம் சரணடைவது மட்டும்தான். பாஜகவுடன் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி வைத்தால் அவரை பாஜக காப்பாற்றும். இல்லையெனில் அப்படியே விட்டுவிடும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் இந்த வீடியோவை தற்போது தன் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் சலசலப்புகள் ஆரம்பம் ! pic.twitter.com/oGMb2ghQpr
— Tiruchi Suriyaa (@TiruchiSuriyaa) November 22, 2024