
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிக அளவு தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஆனால் இவ்வாறு செய்யும்போது மோசடிகள் நடைபெறாமல் இருப்பது அவசியம். அதனால் MMTC – PAMP நிறுவனம் இந்திய அரசால் நடத்தப்படும் டிஜிட்டல் தங்க விற்பனை தளமாகும். இந்த தளத்தின் மூலமாக டிஜிட்டல் தங்கம் வாங்கும் போது 100 சதவீதம் காப்பீட்டுடன் பாதுகாப்பான பெட்டகங்களில் சேமிக்க முடியும். மோசடியும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் திருட்டு பயமும் இல்லை. மேலும் Augmont, SafeGold போன்ற தனியார் நிறுவனங்களிடமிருந்தும், போன் பே, கூகுள் பே, பேடிஎம் அமேசான் பே உள்ளிட்ட பண பரிவர்த்தனை ஆப்-களை பயன்படுத்தியும் டிஜிட்டல் தங்கத்தை வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.