
சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் மாணவர் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடம் டியூஷன் படித்து வந்தார். கடந்த 16-ஆம் தேதி வெளியே சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய போது டியூஷன் ஆசிரியரின் தங்கையான 22 வயது இளம் பெண், ராகுல்(19) என்பவரும் சிறுவனுடன் பாண்டிச்சேரிக்கு ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. போலீசார் மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இளம் பெண்ணும் சிறுவனும் காதலித்தனர். அவர்களின் காதலுக்கு ராகுல் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் இளம்பெண்ணையும், ராகுலையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.