
ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். அதே சமயம் இவர் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இந்த நிலையில் தன்னிடம் டியூஷன் படிக்க வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகின்றது.
இது குறித்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த ஆசிரியர் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.