
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி நேற்று தன்னுடைய முதல் போட்டியில் அயர்லாந்துடன் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய அயர்லாந்து அணியால் இந்திய அணியின் பேட்டிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அயர்லாந்து அணி 16 ஓவர்களில் வெறும் 96 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கிய நிலையில் விராட் கோலி ஒரு ரன்னில் கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா ஜோடி விளையாடினர். இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 36 பந்தில் அரை சதம் எடுத்த நிலையில் அதன் பிறகு காயம் காரணமாக வெளியேறினார். பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் விளையாடிய நிலையில் 2 இரண்டில் சூரியகுமார் யாதவ் அவுட் ஆகினார். இறுதியில் சிக்சர் அடித்து ரிஷப் பண்ட் அணியை வெற்றி பெற வைத்த நிலையில் அவர் மொத்தம் 36 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 97 ரன்கள் எடுத்தது. மேலும் அயர்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது..