ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில் அடுத்த மாதம் போட்டி தொடங்குகிறது. இதில் இந்திய அணி தன்னுடைய தொடக்கப் போட்டியில் வருகின்ற ஜூன் 5-ம்  தேதி அயர்லாந்துடன் நியூயார்க்கில் மோதுகிறது. இதைத்தொடர்ந்து இரண்டாம் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது.

பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நடைபெறும் போட்டியை காண உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இதனால் இந்த போட்டியில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் என்பதில் ஐயமில்லை. இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு தற்போது ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் காரணமாக போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றி வழக்கமான பாதுகாப்பை விட கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என நியூயார்க் காவல்துறை அறிவித்துள்ளது.