
கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுக்க சுகாதாரத்துறை பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தார்வார் மாவட்டம் மம்மி கட்டி என்ற கிராமத்தை சேர்ந்த கோபால் லமானி என்பவர் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஆராத்யா என்ற ஐந்து மாத பெண் குழந்தையும் உள்ளது.
இந்த குழந்தை கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர்கள் கதறி துடித்தனர். இந்த காட்சி காண்பவரே கண் கலங்க வைத்தது. டெங்கு காய்ச்சலுக்கு ஐந்து மாத பெண் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.