டெல்லியில் உள்ள ரோகினி செக்டார் சிஆர்பிஎஃப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளி அருகே நேற்றைய திடீரென மர்ம பொருள் வெடித்து குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. நேற்று பயங்கர சத்தத்துடன் அந்த இடத்தில் வெடி விபத்து நிகழ்ந்து நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு அமைப்பு உட்பட விசாரணை குழு ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் தாக்குதல் சம்பவம் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது என்று telegram-ல் ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் நாட்டில் ஜஸ்டிஸ் லீக் இந்தியா என்ற பெயரில் செயல்படும் டெலிகிராமில் சேனலில் இந்த செய்தி பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவில் டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வீடியோ பகிரப்பட்டுள்ளதோடு கீழே காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வாசகம் உள்ளது.

இந்தியாவால் கற்பனை செய்து பார்க்க முடியாத நேரத்தில் நம்மால் எந்த இடத்தில் இருந்து கொண்டும் தாக்குதல் நடத்த முடியும் என்று காலிஸ்தான் பெயரில் செய்தி வந்துள்ளது. கனடா நாட்டில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அதற்கு இந்தியா தான் காரணம் என்று கனடா அரசு குற்றம் சாட்டியுள்ள நிலையில் அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வத் சிங் பன்னு கொலை முயற்சி வழக்கில் இந்திய முன்னாள் RAW அதிகாரி விகாஷ் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வத் சிங் பன்னு இன்று ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு நவம்பர் 1 முதல் 19 வரையிலான காலகட்டத்தில் அந்த விமானங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் யாரும் பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார். இப்படிப்பட்ட சூழலில் டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காலிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.