
பீகார் மாநிலம் கயாவில் ஜாமுகர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த வாரம் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான செய்தி வெளியாகி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஒரு வீட்டின் மாடியில் ஒரு வயது ஆண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று அங்கு வந்தது. அந்தப் பாம்பை பொம்மை என நினைத்து குழந்தை எடுத்து வாயில் வைத்து கடித்தது.
இந்நிலையில் தன் குழந்தை வாயில் பாம்பை வைத்து கடித்துக் கொண்டிருந்ததை பார்த்த தாய் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த பாம்பை பிடித்து வீசிவிட்டு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என கூறிவிட்டனர். ஆனால் குழந்தை கடித்ததில் ஒரு பகுதி நசுங்கியதால் பாம்பு இறந்துவிட்டது. அந்த பாம்புக்கு விஷத்தன்மை இல்லாததால் குழந்தைக்கு அதிர்ஷ்டவசமாக எதுவும் ஆகவில்லை. மேலும் அந்தப் பகுதியில் மழை நேரங்களில் அவகை பாம்புகள் காணப்படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.