
விநாயகர் சிலை ஊர்வலங்களின் போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
ஊர்வலங்கள் நடைபெறும் பகுதிகளில் டிரோன் கேமராக்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஊர்வலங்கள் நடைபெறும் பகுதிகளில் போதுமான எண்ணிக்கையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த முறை விநாயகர் சிலை ஊர்வலங்கள் அனைத்தும் டிஜிபி அலுவலகத்தில் நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளது. எனவே, மக்கள் அனைவரும் காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என டிஜிபி கேட்டுக்கொண்டுள்ளார்.