கேரள மாநிலத்தில் உள்ள பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பைஜூ (32)-வைஷ்ணவி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் வைஷ்ணவிக்கு விஷ்ணு என்பவருடன் தகாத உறவு இருந்ததாக பைஜூ சந்தேகப்பட்டுள்ளார். இதனால் நேற்று = தன்னுடைய மனைவியை விஷ்ணு வீட்டுக்கு விரட்டி சென்றார். பின்னர் கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி அவர் வைஷ்ணவியை கொடூரமாக கொலை செய்த நிலையில் பின்னர் விஷ்ணுவையும் கொலை செய்தார்.

அதாவது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டபோது வைஷ்ணவி உடனடியாக ஓடிப்போய் விஷ்ணு வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். அவர் வைஷ்ணவியை சரமாரியாக வெட்டிய நிலையில் மருத்துவமனைக்கு விஷ்ணு அழைத்து சென்றார். அப்போதுதான் கோபத்தில் விஷ்ணுவையும் அவர் வெட்டி கொலை செய்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பைஜூவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.