
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதி சேர்ந்தவர் மரிய சாமுவேல் (61). இவரது மனைவி ஜோஸ்பின். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டபோது சாமுவேல் தனது ஜோஸ்பினின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனையடுத்து சாமுவேலின் வீட்டிற்கு சென்ற ஜோஸ்பினின் சகோதரர் தனது தங்கை வீட்டில் இல்லாததை கவனித்தார்.
அதன் பிறகு அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். அப்போது மழை தண்ணீர் வடிந்து செல்லும் வடிகாலின் அருகே ஜோஸ்பின் மேரி கழுத்தை அறுக்கப்பட்டு சடலமாக கடந்ததை கண்டு கதறி அழுதார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜோஸ்பினின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான சாமுவேலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.