பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அர்ஷத் நதீம் சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அந்த போட்டியில் பாகிஸ்தான் சார்பில் பதக்கம் என்ற ஒரே ஒரு வீரர் இவர்தான். இதனால் பாகிஸ்தானில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டதோடு ஏராளமான பரிசுகளும் அறிவிக்கப்பட்டது. அவருக்கு அந்நாட்டு சார்பில் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பணம், வீடுகள் மற்றும் சொகுசு கார் போன்ற பல்வேறு பொருட்கள் குவிந்து வருகிறது.

இப்படி பரிசு மழையில் நனையும் அவர் திடீரென ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது ஐநா சபையால் தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்ட லஸ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஹரிஷ் தார் என்பவரை அவர் சந்தித்துள்ளார். இந்நிலையில் தீவிரவாதியுடன் அர்ஷத் நதீம் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ அவர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பிறகு எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இதற்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.