
தமிழ் திரையுலகில் ஆகஸ்ட் 15-ல் வெளியான தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று உள்ளது. தற்போது இந்த படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க கோரி பெண் வழக்கறிஞர் பொற்கொடி என்பவர் இயக்குனர் பா ரஞ்சித் மீது புகார் கொடுத்துள்ளார்.அந்த புகாரில் புத்த மதத்தை உயர்வாக கூறி வைணவ மதத்தை இழிவு படுத்தும் வகையில் தங்கலான் படம் அமைந்துள்ளது.
அதோடு மாட்டுக்கறியை உண்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. எனவே இக்காட்சிகளை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்தார். மேலும் இது தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.