திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் பால் துறை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கும் நிலையில் திருமணம் ஆகி 4 மகள்கள் இருக்கிறார்கள். இவருடைய 3-வது மகள் செல்வம் (19) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், கடைசி மகள் சுதர்சனா (15) அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை செல்வம் தன்னுடைய தங்கை சுதர்சனாவை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்காக ஸ்கூட்டியில் சிவாஜி நகர் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அரசு பேருந்தில் சுதர்சனாவை ஏற்றி வைத்த பிறகு பேருந்துக்கு முன்பாக சாலையை கடக்க முயன்றார். அப்போது திருநெல்வேலி நோக்கி சென்ற ஒரு தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக ஸ்கூட்டி மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.