
பஞ்சாப் மாநிலத்தில் ஒரு கவரிங் கடையில் நடந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதோடு அது தொடர்பான வீடியோவும் வைரல் ஆகி வருகிறது. அதாவது ஒரு அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் மதியம் 2:30 மணி அளவில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். அந்த கடையை அஜய்குமார் என்பவர் நடத்தி வந்த நிலையில் அவர் மதியம் வீட்டிற்கு சாப்பிட போவதற்காக தன்னுடைய தாய் நீலத்தை கடையில் அமர வைத்து விட்டு சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் மோட்டார் சைக்கிளில் கடைக்கு வந்தனர். அவர்கள் கடைக்கு வந்த உடன் ராதா சுவாமி தேராவை பற்றி விசாரித்ததோடு பின்னர் அஜயின் தாயாரை பயமுறுத்த தொடங்கினார். அதாவது உங்கள் குடும்பத்தினருக்கு மோசமான காலம் வரப்போகிறது என்று கூறி அந்த பெண்ணை ஹிப்னாடிசம் செய்துள்ளனர்.
पंजाब: मोगा में दिनदहाड़े महिला को हिप्नोटाइज कर लाखों का सोना लूटा, लुटेरे फरार#Punjab pic.twitter.com/G16zTqEsFW
— NDTV India (@ndtvindia) April 21, 2025
“>
அந்தப் பெண் மயங்கிய நிலையில் தன்னுடைய தங்க மோதிரங்களை கழற்றி ஒரு வெள்ளை துணியில் சுற்றி கொடுத்துள்ளார். அதற்கு பதிலாக அவர்கள் புல்லால் செய்யப்பட்ட மோதிரத்தை கொடுத்துள்ளனர். அந்த தங்க நகைகளின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் அவர்கள் அதனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அந்த பெண் சுய நினைவுக்கு வந்த போதுதான் தங்கத்திற்கு பதிலாக புல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக தன்னுடைய குடும்பத்தினருக்கு நீலம் தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.