
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர் கிராமத்தில் 17 வயதில் சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக சைல்டு ஹெல்ப்லைன் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளும் போலீஸ் சாரும் அந்த மீனவ கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது வருகிற 30-ஆம் தேதி சிறுமிக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்தது உறுதியானது.
இதனால் அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். 18 வயது நிரம்புவதற்கு முன் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். அதையும் மீறி திருமணத்தை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சிறுமியின் பெற்றோருக்கு அதிகாரிகள் அறிவுரை கூறியுள்ளனர்.