
மராட்டிய மாநிலம் நாக்பூர் காபர் கேடா என்னும் பகுதியில் ரயில்வே கிராசிங் கேட் உள்ளது. அவ்வழியே நேற்று மாலை 4 மணியளவில் விரைவு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதற்காக ரயில்வே கிராசிங் கேட்டை மூட ஊழியர்கள் முடிவு செய்தனர். அப்போது ரெட் சிக்னல் விழுந்த நிலையில் அவ்வழியாக வந்த பள்ளி வாகனம் ஒன்று கேட் மூடுவதற்குள் தண்டவாளத்தை கடக்க வேண்டும் என்று வேகமாக சென்றது.
அப்போது பேருந்து எதிர்பாராத விதமாக கிராசிங் கேட்டில் சிக்கிக்கொண்டது. உடனே பயந்து போன மாணவர்கள் கத்தி கூச்சலிட்டனர். உடனடியாக ஓட்டுநர் தண்டவாளத்தின் பக்கவாட்டில் பேருந்தை நிறுத்தினார். பின்னர் கேட்கீப்பர் உயர் அதிகாரிகளுக்கு பள்ளி பேருந்து சிக்கிக்கொண்டது தொடர்பாக தகவல் தெரிவித்தார். அதோடு அப்பகுதியில் உள்ள மக்களும் தண்டவாளத்தில் ரயில் வரும் பாதை நோக்கி நின்றனர். இதனை எஞ்சின் டிரைவர் பார்த்து ரயிலை நிறுத்தினார். இதனால் 40 மாணவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது