
இந்தியாவைச் சேர்ந்த செஸ் போட்டியின் இளம் வீரரான பிரக்ஞானந்தா சில நாட்களுக்கு முன்பு நார்வேயில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை செஸ் போட்டியில் தோற்கடித்தார். அதை தொடர்ந்து உலகின் நம்பர் 2 வீரரான ஃபேபியானோ கருவானாவுடனான மற்றொரு போட்டியில் அவரையும் வென்று காட்டியுள்ளார். 2023 செஸ் உலக கோப்பையில் கார்ல்சனிடம் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்த நிலையில் தற்போது அவரை வெற்றி பெற்றது அவருக்கு ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்ததோடு மட்டுமல்லாமல்,FIDE தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் அவர் இடம் பெறவும் காரணமாக அமைந்ததுள்ளது. இதனால் சர்வதேச அளவில் அவர் கவனம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் மேடையில் நிகழ்ந்த ஒரு சிறிய நேர்காணல் ஒன்றில் தொகுப்பாளர் பிரக்ஞானந்தா தண்ணீர் குடிக்கும் புகைப்படத்தை காண்பித்து ஏன் விளையாடும் போது தண்ணீர் குடித்தீர்கள் என கேட்ட கேள்விக்கு பிரக்ஞானந்தா மிகவும் எளிமையாக அப்போது எனக்கு தாகமாக இருந்தது என தெரிவித்தார். அதற்கு தொகுப்பாளர் உங்களுக்கு தாகமாக இருந்தது எனக் கூறுகிறார்கள், ஆனால் உங்களுக்கு எதிரே விளையாடுபவர்கள் நீங்கள் தண்ணீர் பாட்டிலை தொடும்போது பதறுகிறார்கள் என தெரிவிக்க, அரங்கமே சிரிக்கிறது. அதன் பின் பிரக்ஞானந்தா இப்போது நான் தண்ணீர் குடித்துக் கொள்ளவா என விளையாட்டாக கேட்க, அதற்கும் அரங்கமே சிரித்து கைதட்டி அவரை பாராட்டியது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram