சிங்கப்பூரில் பாலசுப்பிரமணியம் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று வசித்து வருகின்றனர். கடந்த 21 ஆண்டுகளாக பாலசுப்பிரமணியம் சிங்கப்பூரில் ப்ராஜெக்ட் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் இருக்கும் முஸ்தபா ஜுவல்லரிக்கு சென்றார். அங்கு தனது மனைவிக்காக 6 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் மதிப்பில் தங்க சங்கிலியை வாங்கியுள்ளார். அந்த கடை 250 சிங்கப்பூர் டாலருக்கு பொருட்கள் வாங்குவதற்காக குழுக்கள் பரிசு நடத்தி வருகிறது.

அந்த குழுக்கள் பரிசுப் போட்டியில் பாலசுப்ரமணியம் கலந்து கொண்டார். அவருக்கு குழுக்களில் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசு கிடைத்தது. இந்திய மதிப்பில் அது 8 கோடி ரூபாய் அதிகமானது. அந்த பரிசு குறித்து பாலசுப்பிரமணியம் கூறியதாவது, இன்று எனது தந்தையின் நான்காவது ஆண்டு நினைவு நாள். இந்த பரிசை அவரது ஆசிர்வாதமாகவே நான் கருதுகிறேன். இந்த தகவலை எனது தாய்க்கு தெரிவித்தேன். பரிசுத்தொகையில் ஒரு பகுதியை நான் சிங்கப்பூரில் தங்கி இருந்த பகுதியில் மேம்பாட்டுக்காக தானமாக கொடுக்கப் போகிறேன் என அவர் கூறியுள்ளார்.