மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினில் காதல் நம்பிக்கை முறிந்ததால் 23 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமன் நகர் சோட்டி மாயாபுரியைச் சேர்ந்த சர்வேஷ் ராய்க்வார் என்ற இளைஞர், டெல்லியைச் சேர்ந்த பெண்ணை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தார். பெண் மேஜர் ஆனவுடன் திருமணம் செய்யக் காத்திருந்த அவர், அந்த பெண் வேறொரு இளைஞருடன் தொடர்பில் இருப்பதை அறிந்து மனவேதனையால் தற்கொலை செய்தார். தாயின் சேலையில் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர், தற்கொலைக்கு முன் வீடியோ பதிவு செய்து தன்னுடைய நிலைமையை விளக்கியுள்ளார்.

சர்வேஷின் தாயார் அனிதா தங்களது மகனை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டதும், உடனே அருகில் இருந்தவர்களை அழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். தந்தையை இழந்த குடும்பத்தில் ஒரே மகனாக இருந்த சர்வேஷின் தற்கொலை, குடும்பத்தையும் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இளைஞர்களின் மனநிலையைக் கவனிக்க வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது. போலீசார் மொபைல் பதிவுகளை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.