புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ்அப் என பரவி வரும் whatsapp பிங்க் செயலி மூலமாக பயனர்களின் தகவல் திருட்டு நடைபெறுகிறது என்றும் எச்சரிக்கையாக இருங்கள் எனவும் சைபர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

அதன்படி இந்த பிங்க் வாட்ஸ் அப் இன்ஸ்டால் செய்தால் ஒரிஜினல் வாட்ஸ் அப் செயலியின் background பிங்க் நிறத்தில் மாறிவிடும். உடனடியாக உங்களின் ஓடிபி, தொடர்பு எண்கள், புகைப்படங்கள் மற்றும் வங்கி விவரங்கள் களவு போய்விடும் என்று சைபர் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.