நாகை மாவட்டம் காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்த முத்து (33) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பறவை பகுதியில் இரவு நேரத்தில் ஒரு வீட்டிற்குள் புகுந்து, அங்கு இருந்த தாய், மகள் இருவரையும் தாக்கி, பாலியல் தொந்தரவு அளித்து விட்டு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார், முத்துவை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நாகை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதி கார்த்திகா, முத்துவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.