அர்ஜென்டினா நாட்டில் சாலையில் இளம் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்திருந்த இரு வாலிபர்கள் அந்த பெண்ணை பைக்கில் பின்தொடர்ந்து சென்றனர். அவர்கள் திடீரென அந்த பெண்ணிடம் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் பைக்கில் இருந்து ஒருவர் கீழே இறங்கி ஓடினார். அப்போது சுதாகரித்துக் கொண்ட இளம்பெண் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த வாலிபரை நோக்கி சுட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர் மீண்டும் பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இருப்பினும் அந்த வாலிபருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

இவர்களில் ஒருவருக்கு காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். அந்த வாலிபர்களுக்கு முறையே 18 மற்றும் 19 வயது ஆகிறது. இந்நிலையில் நடந்து சென்ற இளம்பெண் ஒரு காவலர் ஆவார். இவர் அன்றைய தினம் பணியில் இல்லாத நிலையில் சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது தன்னிடம் அவர்கள் கொள்ளையடிக்க வந்ததை அறிந்து தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவர்களை சுட்டார். இளம் பெண்ணின் துணிச்சலான செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.